வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ், எதிர்க்கட்சியாகவும் தோல்வி அடைந்து விட்டது -பிரதமர் மோடி

வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ், எதிர்க்கட்சியாகவும் தோல்வி அடைந்து விட்டது -பிரதமர் மோடி

வாக்குவங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ், எதிர்க்கட்சியாகவும் தோல்வி அடைந்து விட்டது என பிரதமர் நரேந்திரமோடி சாடியுள்ளார்.
Published on

அஜ்மீர்

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வலிமையான எதிர்க்கட்சி இருக்க வேண்டியது அவசியம் என்றார். ஆனால் 60 ஆண்டு காலம் நாட்டை ஆட்சி செய்ததில் தோல்வி அடைந்ததோடு மட்டுமின்றி எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டதாக அவர் விமர்சித்தார்.

வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் கட்சிகள் பதவிக்கு வந்தால், அரசு அதிகாரிகளிடமும் பிளவை ஏற்படுத்தி, அதிகாரத்துவத்தை அழித்து விடுவார்கள். வாக்கு வங்கி அரசியல் வளர்ச்சிக்கு தீங்கானது. 60 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலை நடைமுறைப்படுத்தியது. இது கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது. அரசியல் வளர்ச்சி காங்கிரசுக்கு ஏற்கத்தக்கதல்ல.

ஏன் காங்கிரஸ் உண்மையாக தேர்தலில் பேராடவில்லை? பொய்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை பரப்புவதில் அவர்கள் ஏன் ஈடுபடுகிறார்கள்? வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ், எதிர்க்கட்சியாகவும் தோல்வி அடைந்து விட்டது.

ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தில், வலுவான எதிர்க்கட்சி தேவை. நாட்டிற்கு தாம் பிரதமராக இருந்த போதும், பாஜகவில் சாதாரண தொண்டனாகவே தாம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். பாஜக தலைமை வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்று பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com