எகிப்து: சினாய் மசூதி மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

எகிப்து சினாய் மசூதி மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
எகிப்து: சினாய் மசூதி மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
Published on

புதுடெல்லி,

எகிப்து வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள எல் ஐரிஸ் என்ற நகரின் தலைநகரில் அல் ரவாடா பகுதியில் பிரசித்தி பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் திடீரென துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாறியாக சுட்டான். மேலும் மசூதி மீது பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலும் நடைபெற்றது. இதில் சம்பவத்தில் 235 பேர் உடல் சிதறி பலியாகினர். 100-க்குமு மேற்பட்டேர் காயமடைந்தனர்.

எகிப்து வரலாற்றில் மிகவும் கொடூரமான தாக்குதலாக பார்க்கப்படும் இத்தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.

இந்நிலையில் சினாய் மசூதி மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

எகிப்தில் தொழுகையின் போது பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் கண்டத்திற்குரியது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கிறது. மேலும் இந்த தருணத்தில் மக்களோடு மற்றும் அரசாங்கத்துடன் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com