உள்ளாடைக்குள் பழைய கேள்வித்தாளை மறைத்து நீட் எழுத வந்த மாணவர் கைது

மாணவர் மீது சந்தேகம் எழுந்ததால் அவரை தீவிரமாக சோதனை செய்தனர்.
உள்ளாடைக்குள் பழைய கேள்வித்தாளை மறைத்து நீட் எழுத வந்த மாணவர் கைது
Published on

வாரணாசி,

நாடு முழுவதும் 551 மையங்களில் நீட் மறுதேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை 20 லட்சம் பேர் எழுதினர். தலைவிரிக்கோலம், பலத்த சோதனைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் தேர்வு மையங்களுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில், உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள நீட் தேர்வு மையம் ஒன்றில், நேற்று தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் பரிசோதித்துக்கொண்டு இருந்தனர். அப்போது பிரின்ஸ் துபே என்ற மாணவர் மீது சந்தேகம் எழுந்ததால் அவரை தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் பழைய நீட் தேர்வு கேள்வித்தாள், சிம் கார்டு போன்றவை இருந்தது கண்ட றியப்பட்டது.

உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப் போது அவர் பல்லியா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், மத் திய பிரதேசத்தில் தங்கியிருந்து நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்ததும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com