பேட்ஸ்மேன் கையில் இருந்து நழுவிய கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவன் பலி

பேட்ஸ்மேன் கையில் இருந்து நழுவிய கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவன் பலியானான்.
பேட்ஸ்மேன் கையில் இருந்து நழுவிய கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவன் பலி
Published on

ஆலப்புழா,

கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள சுனக்கரா அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் நவ்னீத் (வயது 12). இவன் நேற்று மதியம் சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதற்காக மைதானம் அருகே இருந்த குழாயடிக்கு சென்றான். மைதானத்தில் சிலர் மரக்கட்டையால் செய்த மட்டையை வைத்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக பேட்ஸ்மேன் கையில் இருந்த மட்டை நழுவி பறந்துவந்து நவ்னீத்தின் பின் மண்டையில் தாக்கியது. இதில் நவ்னீத் மயங்கி விழுந்தான். ஆசிரியர்கள் சிலர் அவனுக்கு முதலுதவி அளித்து, அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். டாக்டர்கள் அவனை தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே நவ்னீத் பரிதாபமாக இறந்தான். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com