ஹிஜாப் விவகாரம்:கர்நாடக ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு

பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
கோப்பு படம்(பிடிஐ)
கோப்பு படம்(பிடிஐ)
Published on

புதுடெல்லி,

ஹிஜாப் அணியும் விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். ஹிஜாப் அணிவதற்கு அரசு பிறபித்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையில், நீதிபதிகள் கிருஷ்ண தீட்ஷித்.ஜே.எம். காஜி ஆகியோர் அடஙகிய அமர்வு பிப்ரவரி மாதம் விசாகரணை தொடங்கியது.

விசாரணை தொடங்கி முதல் நாளிலேயே ஹிஜாப் அணிய ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் 11 நாட்களாக இந்த மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் ஹிஜாப் அணியும் விவகாரத்தில் அரசு பிறபித்த உத்தரவு சட்ட விதிகளுக்கு உட்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் அரசை கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஹிஜாப் என்பது முஸ்லிம் சமூகத்தில் ஒரு அவசியமானதாக கருத முடியாது. எனவே, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு வரும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி இல்லை,. அனைத்து மாணவர்களும் ஓன்றே என்பதை வலியுறுத்தும் வகையில் சீருடைகளை அணிந்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் ஏற்று பின்பற்ற வேண்டும். இந்த தீர்ப்பை அமல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 6 மாணவிகள் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com