மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் மீது மாணவி; இடுப்போடு கட்டிப்பிடித்தபடி வண்டி ஓட்டிய காதலன் கைது

மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் மீது மாணவி; இடுப்போடு கட்டிப்பிடித்தபடி வண்டி ஓட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் மீது மாணவி; இடுப்போடு கட்டிப்பிடித்தபடி வண்டி ஓட்டிய காதலன் கைது
Published on

விசாகபட்டினம்

ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில், 19 வயது பள்ளி மாணவியும், 22 வயதுடைய அஜய் குமார் என்பவரும் பைக்கில் சென்றுள்ளனர். இவர்கள் பைக்கில் சென்ற விதம், காவல்துறை வரை பிரச்னையைக் கொண்டு சென்றுள்ளது.

டூவீலரை அந்த நபர் ஓட்ட, பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்த மாணவி, அவரை கட்டிப்பிடித்தபடி பயணித்துள்ளார். இருவரும் ரொமான்ஸ் செய்துகொண்டே சிறிது தூரம் வரை வேகமாகச் செல்ல, சாலையில் பயணித்தவர்களின் கவனம் இவர்கள் மேல் விழுந்துள்ளது.

ஆபத்தான முறையில் இவர்கள் பயணிப்பதை, காரில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கியது. அதன்பின் காவல்துறை அதிகாரிகள், வண்டியின் எண்ணை வைத்து அந்த நபர்களைப் பிடித்துள்ளனர்.

அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் 336, 279, 132, 129 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த மாணவி மற்றும் நபரின் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.

இது குறித்து விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் சி.ஹெச்.ஸ்ரீகாந்த் கூறுகையில், ``குடிமகன்களும் அவர்களின் குடும்பங்களும் சாலை விதிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com