மதிப்பெண் குறைந்ததால் கண்டித்த ஆசிரியையின் ஏ.ஐ. ஆபாச வீடியோவை வெளியிட்ட மாணவன்

பாதிக்கப்பட்ட ஆசிரியை தொல்லை தாங்க முடியாமல் மாணவன் இவ்வாறு செய்துள்ளார்.
மதிப்பெண் குறைந்ததால்  கண்டித்த ஆசிரியையின் ஏ.ஐ. ஆபாச வீடியோவை வெளியிட்ட மாணவன்
Published on

தெலுங்கானா,

மதிப்பெண் குறைந்ததால் கண்டித்த ஆசிரியையின் ஏ.ஐ. ஆபாச வீடியோவை வெளியிட்ட மாணவன் கைது செய்யப்பட்டுள்லார்.

தெலுங்கானா மாநிலம், அதிலா பாத் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்காக தன்னை கண்டித்த ஆசிரியையை, ஒரு மாணவர் இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி. உருவாக்கி ஆபாச வீடியோக்களை பதிவிட்டு தொல்லை கொடுத்துள்ளார். அந்த மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிலாபாத் முதலாவது நகர போலீஸ் இன்ஸ்பெகடர் பி. சுனில்குமார் கூறுகையில், அதிலாபாத் நகரில் உள்ள ஒரு தனியார் ஜூனியர் கல்லூரியில் இண்டர் மிடியட் முதலாம் ஆண்டு படித்து வரும் 18 வயது மாணவன், கடந்த தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதன் காரணமாக, அவருக்கு இயற்பியல் பாடம் கற்பித்த ஆசிரியை கண்டித்துள்ளார்.

இதனால் ஆசிரியை மீதுள்ள கோபத்தில், கடந்த நவம்பர் மாதம் முதல் இன்ஸ்டாகிராமில் ஆசிரியை குறித்து ஏஐ தொழில்நுட்பத்தில் ஆபாச பதிவுகளை உருவாக்கி மாணவன் பதிவிட்டு வந்துள்ளார். பாதிக்கப்பட்ட ஆசிரியை தொல்லை தாங்க முடியாமல் நேற்று முன்தினம் புகார் அளித்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாணவனை கைது செய்து விசாரித்து வருகிறோம்' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com