மாணவி பாலியல் வன்கொடுமை: தொழிலாளி கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை போலீசார் கைதுசெய்தனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை: தொழிலாளி கைது
Published on

இடுக்கி,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள கஞ்சிக்குழி பகுதியை சேர்ந்தவர் சன்னிஸ்கரியா (வயது 53). கூலித்தொழிலாளி. இவர், 7-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து கஞ்சிக்குழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சன்னிஸ்கரியாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com