செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் - வீடியோ

புதுச்சேரியில் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் - வீடியோ
Published on

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலத்தில் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வை தவிர மற்று அனைத்து தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி தாகூர் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போன்று போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தியும் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் ஈடுபட்டனர்.

அவர்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com