

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில், காஷ்மீர் பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் 2 பிரிவுகளாக பிரித்து மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.
முதல் பிரிவில் மொத்தம் 58 பேர் தங்க பதக்கங்களை பெற்று கொண்டனர். அவர்களில் 42 பேர் மாணவிகள் ஆவர்.
இதேபோன்று 2வது பிரிவில் 72 மாணவர்களும், 240 மாணவிகளும் தங்க பதக்கங்களை பெற்று கொண்டனர். இதுபற்றி கவர்னர் சின்ஹா கூறும்போது, பெண்களை சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் வலிமை உள்ளவர்களாக ஆக்குவது என்பது மிக முக்கியம்.
ஆச்சரியப்படத்தக்க வகையில் சாதனை படைத்த பல்கலை கழகத்தின் அனைத்து மாணவிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள் என தெரிவித்து கொண்டார்.