மாவட்ட அளவில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு - மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆலோசனை

மாவட்ட அளவில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கி உள்ளது.
மாவட்ட அளவில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு - மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆலோசனை
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றத்தின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியதில் இருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செரோ சர்வே நடத்தி வருகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் மக்களிடம் இருந்து ரத்தம் சேகரித்து, ஆன்டிபாடி என்னும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறதா என கண்டறிவதே செரோ சர்வே . அப்படி உருவாகி இருந்தால் அந்த நபர்களுக்கு கொரோனா வந்து போயுள்ளது என்று அர்த்தம் ஆகும். இதன்மூலம் மாத்தம் எவ்வளவு பேர் இன்னும் காரானா பாதிக்கும் ஆபத்தில் இருக்கிறார்கள் எனவும் கண்டறிய முடியும்.

மாவட்ட அளவில் தரவுகளை உருவாக்குவதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் கலந்தாலோசனை செய்து, இந்த செரோ சர்வேக்களை மாவட்ட அளவில் நடத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. இதையொட்டி மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com