கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் - ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது.
கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் - ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில், கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் செயல்திறன் 81 சதவீதம் ஆகும்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் செயல்திறன் 70 சதவீதம்.

இந்தநிலையில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தினால் பாதுகாப்பானது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.

இருவேறு தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது என ஆய்வில் தெரியவந்துள்ளது. சில இடங்களில் தடுப்பூசி மாற்றிபோடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com