வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் வரும்: ஸ்மிருதி இரானியை இழிவுபடுத்த வேண்டாம் - ராகுல்காந்தி

காங்கிரஸ் தொண்டர்கள் தரப்பில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்தனர்.
வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் வரும்: ஸ்மிருதி இரானியை இழிவுபடுத்த வேண்டாம் - ராகுல்காந்தி
Published on

புதுடெல்லி,

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை அவரது குடும்பத் தொகுதியான அமேதியில் தோற்கடித்த ஸ்மிருதி இரானி, 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் ஸ்மிருதி இரானி தோல்வியடைந்தார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியை இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்."தேர்தலில் தோல்விக்குப் பிறகு, வெற்றியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்மிருதி, அமேதிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்" என்றார். மேலும், தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவுகளையும் வெளியிட்டார். இதற்கு, காங்கிரஸ் தொண்டர்கள் தரப்பில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்நிலையில், ஸ்மிருதி இரானி குறித்தோ அல்லது வேறு எந்த தலைவர் குறித்தோ யாரும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிக்கக் கூடாது என ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம்.அந்த விஷயத்தில் ஸ்மிருதி இரானி அல்லது வேறு எந்த தலைவர்களையும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், கேவலமாக நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களை அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளம், வலிமை அல்ல."

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com