அடுத்தடுத்து வந்த அரசுகள் இஸ்லாமிய மதத்தினரை புறக்கணித்தன - ஒவைசி

உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து வந்த அரசுகள் இஸ்லாமிய மதத்தினரை புறக்கணித்ததாக அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
அடுத்தடுத்து வந்த அரசுகள் இஸ்லாமிய மதத்தினரை புறக்கணித்தன - ஒவைசி
Published on

லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் உத்தரபிரதேசத்தில் தேர்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின்னர் ஒவைசி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து வந்த அரசுகள் இஸ்லாமிய மதத்தினரை புறக்கணித்தன. அரசியல் கட்சிகளால் உத்தரபிரதேசத்தில் சிறுபான்மையினர் தவறாக உபயோகப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு அநீதி நடந்துள்ளது. நிறைய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், இஸ்லாமிய மதத்தினரின் வளர்ச்சிக்காக எந்த அரசும் செயல்படவில்லை. இஸ்லாமிய மதப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 2 ஆண்டுகளாக சம்பளம் பெறவில்லை. மத்திய, மாநில அரசுகள் தான் இதற்கு காரணம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com