பூரி கடற்கரையில் உலகக் கோப்பை கால்பந்து குறித்த மணல் சிற்பம்...!

உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
பூரி கடற்கரையில் உலகக் கோப்பை கால்பந்து குறித்த மணல் சிற்பம்...!
Published on

ஒடிசா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 2-வது நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கிய பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் குறித்து பூரி கடற்கரையில் 8 அடி உயர மணல் சிற்பத்தை அவர் உருவாக்கி உள்ளார். இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஐந்து டன் மணலைப் பயன்படுத்தி, இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்றுள்ள 32 நாடுகளை சேர்ந்த 1,350 நாணயங்களையும், இந்திய நாணயங்களையும் அவர் பயன்படுத்தி உள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு மணல் சிற்ப போட்டிகளில் பங்கேற்ற போது இந்த நாணயங்களை சேகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மணல் சிற்பம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com