உலகின் மிக உயரமான படேல் சிலைக்கு அருகில் திடீர் நிலநடுக்கம்

படேல் சிலை அருகே நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது
உலகின் மிக உயரமான படேல் சிலைக்கு அருகில் திடீர் நிலநடுக்கம்
Published on

குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சிலை நிறுவப்பட்டு உள்ளது. நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும்வகையில், 'ஒற்றுமை சிலை' என்று இது அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் படேல் சிலை அருகே நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது .ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது. . அதன் மையப்பகுதி தெற்கு குஜராத்தில் உள்ள கெவாடியாவின் தென்கிழக்கே 12 கிமீ தொலைவில் உள்ளது. இது 12.7 கிமீ ஆழத்தில் பதிவானது என நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

.மேலும் அப்பகுதியில் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .நிலநடுக்கத்தால் சிலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com