கோதாவரி ஆற்றில் திடீர் வெள்ளம்: மீன்பிடிக்கச் சென்ற 5 பேர் பலி

வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 5 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
கோதாவரி ஆற்றில் திடீர் வெள்ளம்: மீன்பிடிக்கச் சென்ற 5 பேர் பலி
Published on

அமராவதி,

ஆந்திரப் பிரதேசத்தின் போலவரம் அருகே உள்ள கொள்ளகூடம் பகுதியைச் சேர்ந்த 8 பேர் கோதாவரி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் ஆற்றில் வலை வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திடீர் வெள்ளம்

இந்த வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 5 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரின் உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com