புது புல்லட்டுக்கு பூஜை.. தீடீரென வெடித்த பயங்கரம்..!

ஆந்திராவில் புதிதாக வாங்கப்பட்ட புல்லட் வாகனத்திற்கு பூஜை செய்த போது வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புது புல்லட்டுக்கு பூஜை.. தீடீரென வெடித்த பயங்கரம்..!
Published on

ஆந்திரா,

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், குண்டகல்லுவில் பிரசித்தி பெற்ற கசாபுரம் ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. இங்கு மைசூரை சேர்ந்த ரவிச்சந்திரா என்பவர் யுகாதி பண்டிகையை முன்னிட்டு தனது புதிய புல்லட் வண்டிக்கு பூஜை போட வந்துள்ளார். நீண்ட தூரத்தில் இருந்து வந்ததால் வண்டி சூடாக இருந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் வண்டியை பூஜை போட நிறுத்திய போது தீ பிடிக்க தொடங்கியது

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் உள்ளவர்கள் விலகி ஓடினர். இந்நிலையில் சற்றும் எதிர்பாராத நேரத்தில் புல்லட் வண்டியின் பெட்ரோல் டேங்க் வெடித்து மின்னல் வேகத்தில் காற்றில் பறந்தது. இதை கண்டு அங்கிருந்த அனைவரும் தெறித்து ஓடினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது நீண்ட நேரம் நிற்காமல் ஓட்டி வந்ததால் வாகனம் சூடு தாங்காமல் தீ பிடித்து வெடித்ததா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com