மூச்சுத்திணறும் உற்பத்தி துறை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லாமல், பல ஆண்டுகள் பின்னோக்கி செல்வதாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
மூச்சுத்திணறும் உற்பத்தி துறை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது;-

எல்பிஜி எரிவாயு நெருக்கடியை கோவிட் போல கையாள்வோம் என்று மோடி கூறினார். ஆனால் உண்மையில், மக்கள் அதைத்தான் செய்தார்கள். கோவிட் போலவே - கொள்கை ஒன்றுமில்லை, அறிவிப்பு பெரிதாக இருக்கிறது,ஆனால் சுமை ஏழைகள் மீது விழுகிறது.

தினமும் ரூ. 500 முதல் 800 வரை சம்பாதிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சமையல் எரிவாயு எட்டாத ஒன்றாக மாறிவிட்டது. மேலும் இரவில் வீடு திரும்பும் தொழிலாளர்களிடம் அடுப்பை பற்றவைக்கக்கூட பணம் இல்லை என்றும் கூறினார். இந்த நெருக்கடியால் தொழிலாளர்கள் நகரங்களை விட்டு வெளியேறி மீண்டும் கிராமங்களுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜவுளி துறை ஏற்கனவே தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. இது உற்பத்தி துறைகளை பெரிதும் பாதிக்கும் என்றும், அந்த துறைகள் தற்போது மூச்சு திணறிக்கொண்டிருப்பதாகவும். நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லாமல், பல ஆண்டுகள் பின்னோக்கி செல்வதாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நெருக்கடிக்கு அரசின் ராஜதந்திர தவறுகளே காரணம் என்று குற்றம் சாட்டிய ராகுல், ஆணவம் கொள்கையாக மாறும்போது பொருளாதாரம் சீர்குலையும் என்றும் அதை அரசாங்கம் இன்னும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது என தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு கேள்விதான் - ஒவ்வொரு நெருக்கடியிலும், ஏன் ஏழை மனிதன் முதலில் இறக்கிறான்? மௌனமாக இருக்காதீர்கள். இது ஏழைகளின் கேள்வி மட்டுமல்ல, நம்முடையதும்கூட என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com