தொழில் நிறுவனங்களுக்கான சர்க்கரை இருப்பு வரம்பு 30 நாட்களாக உயர்வு

பெரிய அளவிலான சர்க்கரை நுகர்வோருக்கான இருப்பு வரம்பை, 15 நாட்களிலிருந்து 30 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கான சர்க்கரை இருப்பு வரம்பு 30 நாட்களாக உயர்வு
Published on

புதுடெல்லி,

பண்டிகை காலம் நெருங்குவதால், தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான சர்க்கரை நுகர்வோருக்கான இருப்பு வரம்பை, 15 நாட்களிலிருந்து 30 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதுகுறித்து உணவு மற்றும் பொது வினி யோக துறை தெரிவித்துள்ள தாவது:

மாதத்துக்கு 10 டன் சர்க்கரையை மூலப்பொருளாக பயன்படுத்தும் பெரிய நுகர்வோருக்கு இது பொருந்தும். கூடுதல் 15 நாட்கள் இருப்பு, சுங்க வரி ஒதுக்கீடு அல்லது முன்கூட்டிய அனுமதி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரையிலிருந்து மட்டுமே இருக்க வேண்டும். திறந்த சந்தையிலிருந்து வாங்கும் இருப்பு 15 நாட் களுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.

பண்டிகை காலத்தில் தொழில் நிறுவனங்களுக்கு தட்டுப்பாடின்றி சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'டாரிப் ரேட் கோட்டா' வாயிலாக ஏற்கனவே 10 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மொத்த நுகர்வோர் தங்களிடம் உள்ள சர்க்கரை இருப்பை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய உணவு அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com