மனைவிக்கு எஸ்எம்எஸ் மூலம் விவகாரத்து கொடுத்த கணவர்

சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் ஒருவர் தனது மனைவிக்கு எஸ்எம்எஸ் மூலம் தலாக் ( விவகாரத்து) அனுப்பி உள்ளார்.#SaudiArabia #tripletalaq
மனைவிக்கு எஸ்எம்எஸ் மூலம் விவகாரத்து கொடுத்த கணவர்
Published on

சுல்தான்பூர்

உத்தரபிரதேசம் சுல்தான்பூரை சேர்ந்த ஒருவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவிக்கு எஸ்எம்எஸ் மூலம் தலாக் ( விவகாரத்து அனுப்பி உள்ளார்.

இது குறித்து பாதிக்கபட்ட பெண் கூறியதாவது:-

என் மாமியார் என்னிடன் வாகனம் கேட்டு தொல்லை படுத்தினார். என்கணவர் என்னை தவறாக நடத்தினார்.எனக்கு என் கணவரிடம் இருந்து ஒரு எஸ்எம்எஸ் தகவல் வந்து உள்ளது.அதில் அவர் எனக்கு விவாகரத்து கொடுத்து உள்ளார். எனக்கு ஒரு மகன் இருக்கிறான் நாங்கள் வாழ வேண்டும். இது என்னுடைய வீடு நான் இங்கிருந்து விலகி செல்லமாட்டேன்.என கூறி உள்ளார்

இது குறித்து பாதிக்கபட்ட பெண்ணின் தந்தை கூறியதாவது:-

திருமணமாகி 2 வருடங்கள் நன்றாக சென்றது. பின்னர் அவர்கள் என்மகளை கொடுமை படுத்த தொடங்கினார்கள். அவளுடைய மாமியார் என் மகளை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.ஒரு நாள் எஸ்.எம்.எஸ் மூலம் என்மகள் கணவர் விவாகரத்து செய்து உள்ளார். நாங்கள் இது குறித்து போலீசில்தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com