புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் 2-ஆம் தேதி முதல் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
Published on

புதுச்சேரி,

நாளை (28-04-2025) முதல் ஜூன் 1-ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அமைச்ச்சர் நமச்சிவாயம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் நாளை (28.04.2025) முதல் வரும் ஜூன் மாதம் (01.06.2025) ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் (02.6.2025) தேதி முதல் வழக்கம் போல் செயல்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com