பாஜக வெற்றியை குறைத்து மதிப்பிட சிலர் நினைக்கிறார்கள்: பிரதமர் மோடி

பாஜக வெற்றியை குறைத்து மதிப்பிட சிலர் நினைக்கிறார்கள்; எல்லா வண்ணங்களும் காவியாக மாறிவிட்டது என்பதே உண்மை என்று பிரதமர் மோடி பேசினார். #PMModi #NarendraModi
பாஜக வெற்றியை குறைத்து மதிப்பிட சிலர் நினைக்கிறார்கள்: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

திரிபுரா மாநிலத்தில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றுள்ளதற்கு பிரதமர் மோடியின் கொள்கைகளே காரணம் என்று அக்கட்சி தலைவர்களும் தொண்டர்களும் பாரட்டி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாஜகவின் புதிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றினார். பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*பாஜக வெற்றியை குறைத்து மதிப்பிட சிலர் நினைக்கிறார்கள்; எல்லா வண்ணங்களும் காவியாக மாறிவிட்டது என்பதே உண்மை.

*திரிபுராவில் இடதுசாரிகளின் தாக்குதலுக்கு பாஜக தொண்டர்கள் பலர் பலியாகி உள்ளனர்.

*மக்களை அச்சுறுத்துவதும், குழப்புவதும் இடதுசாரிகளின் கைவந்த கலை

*தேர்தல்களில் கிடைத்த வெற்றியை, தன்னுயிரை கொடுத்து உழைத்த பாஜக தொண்டர்களுக்கு காணிக்கையாக்குகிறோம்

*பாஜக தொண்டர்களின் அயராத உழைப்பால்தான் இந்த வெற்றி சாத்தியமானது

*சூரியன் மறையும்போது சிகப்பு வண்ணத்தில் இருக்கும், ஆனால் அது உதிக்கும் போது காவி நிறத்தில்தான் இருக்கும்

*பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு பிரபலங்கள் தேவையில்லை, இளைஞர்கள் போதும்.

*வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முன்வந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com