

புதுடெல்லி
சுனந்தா மரணமடைந்த ஹோட்டல் உரிமையாளர் அவர் இறந்து கிடந்த அறையை காவல்துறையினர் இன்னும் திரும்ப ஒப்படைக்கவில்லை என்றும் இதனால் கடந்த மூன்றாண்டுகளில் ரூ 50 லட்சம் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்து நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இது தொடர்பாக கேள்விகள் எழுப்பிய நீதிபதி, காவல்துறையினரின் மெத்தனமான நடவடிக்கையால் மனுதாரர் ஏற்கனவே பாதிப்படைந்துள்ளார் விசாரணை என்ற பெயரில் பெரும் நிதியிழப்பை சந்தித்து வருகிறது. இதற்கு பதிலளித்த காவல்துறையினர் சமீபத்தில்தான் தடவியல் சோதனையாளர்கள் ஹோட்டல் அறைக்கு சென்று பல்வேறு ஆதாரங்களை திரட்டி வந்துள்ளனர். எனவே விசாரணையை முடிக்க அவகாசம் கேட்டனர். மேற்கொண்டு அந்த அறை தேவைப்படாது என்ற நிலை வரும் வரை அதை ஒப்படைக்க முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.