

புதுடெல்லி,
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி டெல்லியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழுவினர் சசிதரூர் மீது மனைவியை கொடுமைப்படுத்தியது, தற்கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனாலும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் மீது தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 7-ந் தேதி (இன்று) அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. கோர்ட் உத்தரவுப்படி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் சசிதரூர் இன்று ஆஜரானார். இதையடுத்து, டெல்லி பாட்டியாலா கோர்ட்டும் சசிதரூருக்கு ஜாமீன் வழங்கியது.
ஏற்கனவே, இதே வழக்கில் சசிதரூருக்கு ஷெஷன்ஸ் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.