பீகார் இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு - ராம்விலாஸ் பஸ்வான் மகன் அறிவிப்பு

லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி., இத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பீகார் இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு - ராம்விலாஸ் பஸ்வான் மகன் அறிவிப்பு
Published on

பாட்னா,

பீகார் மாநிலத்தில் மொகாமா, கோபால்கஞ்ச் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதில், ராஷ்டிரீய ஜனதாதளம்-பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தநிலையில், மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) தலைவருமான சிராக் பஸ்வான் எம்.பி., இத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றிருந்தார். பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யப்போவதாக அவர் நேற்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com