ஞானேஷ்குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி நடத்தும் பேரணிக்கு ஆதரவு: சிஜேபி அறிவிப்பு

ஞானேஷ்குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி நவம்பர் 1-ம் தேதி நடத்தும் பேரணிக்கு ஆதரவு அளிப்பதாக அபிஜீத் தீப்கே அறீத்துள்ளார்.
அபிஜீத் தீப்கே
அபிஜீத் தீப்கே
Published on: 

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்ட ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 1-ந்தேதி டெல்லியில் காங்கிரஸ் பேரணியை அறிவித்துள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் இந்த பேரணியில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் பேரணிக்கு டெல்லி காவல்துறையும் அனுமதியும் வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகை நேரத்தில் பேரணியால் தங்கள் வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் பேரணியை ஒத்திவைக்குமாறு டெல்லி வர்த்தகர்கள் கோரிக்கை வைத்த நிலையில், இதனை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் இந்த பேரணிக்கு ஆதரவு அளிப்பதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்களுக்காகப் போராடும் அனைத்து அமைப்புகளுக்கும் கரப்பான் பூச்சி ஜனதா ஆதரவளிக்கும் எனவும், தேசம்தான் முதன்மையானது எனவும் அபிஜித் தீப்கே பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com