கர்நாடக அரசுக்கு அளித்த வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றனர்

கர்நாடக அரசுக்கு அளித்த வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றனர். கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
கர்நாடக அரசுக்கு அளித்த வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றனர்
Published on

பெங்களூர்

கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் 12-ந்தேதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

மொத்தம் உள்ள 224 இடங்களில் பாரதீய ஜனதா 104 இடங்களை கைப்பற்றியது. காங்கிரசுக்கு 82 இடங்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 38 இடங்களும் கிடைத்தன.

அதிக இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா முதல்-மந்திரியாக முதலில் பதவி ஏற்றார். ஆனால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் அவர் பதவி விலகினார். இதனால் ஜனதா தளம் (எஸ்) கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து அங்கு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த குமாரசாமி இருந்து வருகிறார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் ஆபரேஷன் தாமரை என்ற குதிரை பேர நடவடிக்கையை எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா தொடங்கி இருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங், நாகேந்திரா ஆகியோர் திடீரென்று மாயமாகிவிட்டனர். அவர்கள் மும்பையில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களுடன் காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இவர்கள் தவிர பி.சி.பட்டீல், கணேஷ் ஜூக்கேரி, பீமாநாயக், ஹொலகேரி, உமேஷ் ஜாதவ், பிரதாப் பட்டீல் உள்ளிட்ட 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதாவுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த 12 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணையப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணியில் சிக்கல் உருவாகி, குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெர்று கொண்டனர்.

சங்கர்- நாகேஷ் என்ற இரு சுயேட்சை எம்.எல்,ஏக்கள் கவர்னர்ருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கர்நாடக அரசுகு அளித்து வந்த ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுவதாக கூறி உள்ளனர்.

இதனால் குமாரசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 117 ஆக குறந்தது.

ஆதரவை வாபஸ் பெற்ற எம்.எல்.ஏக்கள் பாரதீயஜனதாவை ஆதரிக்கப்போவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com