

புதுடெல்லி,
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி செலுத்துதல் தொடர்பான வழக்கில், மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக மத்தியபிரதேச ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து மத்திய அறங்காவலர்கள் வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
அம்மனு, நீதிபதிகள் ஏ.எம்.சாப்ரே, நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இந்த வழக்கில் ஐகோர்ட்டு தனது சட்ட கடமைகளை மனதில் கொள்ளவில்லை. ஒரு வழக்கில் ஒருதரப்புக்கு ஏன் வெற்றி கிடைத்தது, மற்றொரு தரப்புக்கு ஏன் தோல்வி கிடைத்தது என்பதை இருதரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில், அதற்கான காரணங்களுடன் கோர்ட்டுகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எனவே, இந்த விவகாரத்தை மத்தியபிரதேச ஐகோர்ட்டு புதிதாக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.