பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Published on

புதுடெல்லி,

ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகநாதர் ஆலயத்தின் ரத யாத்திரை வரும் ஜூன் 23-ந் தேதி நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்த யாத்திரையை தள்ளி வைக்க வேண்டும் என ஒடிஷா விகாஸ் பரிஷத் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த யாத்திரை விழாவை தற்போது நடத்தினால் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என அந்த தொண்டு நிறுவனம் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது. எனவே இதனை கருத்தில் கொண்டு இந்த யாத்திரையை ஒத்திவைக்க மாநில அரசுக்கு உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெகநாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது. இந்த யாத்திரையை நடத்த அனுமதித்தால் ஜெகன்நாதர் நம்மை மன்னிக்கமாட்டார். தற்போதைய கொரோனா சூழலில் ஏராளமான மக்கள் கூடுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் நலன் கருதி இந்த ரத யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com