

மதுரை மாவட்ட கோர்ட்டில் ரூ.166 கோடி செலவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் அடிக் கல் நாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து கீழ்தளம், தரை தளம் மற்றும் 3 கூடுதல் தளங்களுடன் அனைத்து நவீன வசதிகளு டன் கூடிய கட்டிடம் கட்டும் பணிகள் நடந்தன.
சுமார் 3 ஆண்டுகளில் மதுரை மாவட்ட கோர்ட்டில் கூடுதல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து அந்த கட்டிடத்தின் திறப்பு விழா நாளை (19-ந்தேதி) நடக்கிறது. இந்த கட்டிடத்தை திறந்து வைக்க சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நாளை மதுரை வருகிறார். தொடர்ந்து காலை 11 மணிஅள வில் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். முன்னதாக மதுரை மாவட்ட கோர்ட்டின் கூடுதல் கட்டிடத்தின் வீடியோ வெளியீடு நடக்கிறது.
இந்த கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, எம்.எம்.சுந்தரேஷ், மகாதேவன் ஆகியோரும் சிறப்புரை ஆற்றுகின்றனர். முன்னதாக சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தலைமை உரை ஆற்றுகிறார்.