

அதன்படி, வக்கீல் ஜெ.சத்தியநாராயண பிரசாத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு 4 வக்கீல்களும், ஒரு நீதிசார் அலுவலரும் நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்டதற்கு கொலிஜீயம் ஒப்புதல் அளித்துள்ளது.
அலகாபாத் ஐகோர்ட்டுக்கு ஒரு வக்கீலையும், கர்நாடகா ஐகோர்ட்டுக்கு 4 வக்கீல்களையும் நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு கொலிஜீயம் ஒப்புதல் அளித்துள்ளது.
கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு இரு வக்கீல்களை நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு கொலிஜீயத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதுபோல பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் பணியாற்றிவரும் 10 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கும் கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.