சுப்ரீம் கோர்ட்டிற்கு 3 நீதிபதிகளை பரிந்துரை செய்த கொலீஜியம் - யார் அவர்கள்..?

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் ஐகோர்ட் நீதிபதிகள் மூவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பரிந்துரை செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் சமீபத்தில் ஓய்வு பெற்றனர். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் மூன்று காலியிடங்களுடன் தற்போது 31 நீதிபதிகள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் ஐகோர்ட் நீதிபதிகள் மூவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பரிந்துரை செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டுக்குகு பதவி உயர்வு பெற கொலீஜியம் பரிந்துரைத்த மூன்று நீதிபதிகள்

குஜராத்தைச் சேர்ந்த நீதிபதி என்.வி.அஞ்சாரியா தற்போது கர்நாடக ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி

ராஜஸ்தானைச் சேர்ந்த நீதிபதி விஜய் பிஷ்னோய் தற்போது கவுகாத்தி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி

மகராஷ்டிராவைச் சேர்ந்த நீதிபதி அதுல் எஸ்.சந்துர்கர் தற்போது மும்பை ஐகோர்ட்டின் நீதிபதி.

நீதிபதி அஞ்சாரியா:

நீதிபதி அஞ்சாரியா ஆகஸ்ட் 1988 இல் குஜராத் ஐகோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் எஸ்.என்.ஷெலட்டின் கீழ் வழக்கறிஞர் பயிற்சி செய்யத் தொடங்கினார். அவர் அரசியலமைப்பு, சிவில், தொழிலாளர் மற்றும் சேவை விவகாரங்களைக் கையாண்டார். ஐகோர்ட்ம், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் குஜராத் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அமைப்புகளுக்கான நிலை ஆலோசகராகப் பணியாற்றினார்.

நவம்பர் 21, 2011 அன்று நீதிபதி அஞ்சாரியா குஜராத் ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் செப்டம்பர் 6, 2013 அன்று நிரந்தர நீதிபதியானார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 25, 2024 அன்று கர்நாடக ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றார்.

நீதிபதி பிஷ்னோய்:

நீதிபதி பிஷ்னோய் ஜூலை 8, 1989 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்து, ராஜஸ்தான் ஐகோர்ட் மற்றும் ஜோத்பூரில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் சிவில், குற்றவியல், அரசியலமைப்பு, சேவை மற்றும் தேர்தல் வழக்குகள் உட்பட பல்வேறு விஷயங்களைக் கையாண்டார்.

அவர் கூடுதல் மத்திய அரசு நிலை ஆலோசகராக (20002004) பணியாற்றினார் மற்றும் கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், முத்திரைகள் மற்றும் பதிவு, கூட்டுறவு, தொழிலாளர், போக்குவரத்து மற்றும் கலால் வரி போன்ற ராஜஸ்தான் அரசின் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ஜனவரி 8, 2013 அன்று ராஜஸ்தான் ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி பிஷ்னோய், அடுத்த இரண்டாடுகளில் நிரந்தர நீதிபதியானார். தொடர்ந்து கவுகாத்தி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி பதவியேற்றார்.

நீதிபதி சந்தூர்கர்:

நீதிபதி சந்தூர்கர் ஜூலை 21, 1988 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்து, மும்பையில் உள்ள மூத்த வழக்கறிஞர் பி.என். நாயக்கின் அலுவலகத்தில் தனது சட்டப் பணியைத் தொடங்கினார். பின்னர் அவர் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

நீதிபதி சந்தூர்கர் இதுவரை இரண்டு சட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஒன்று மகாராஷ்டிரா நகராட்சி மன்றம், நகர் பஞ்சாயத்துகள் மற்றும் தொழில்துறை டவுன்ஷிப்கள் சட்டம், 1965 மற்றும் மற்றொன்று மகாராஷ்டிரா வாடகை கட்டுப்பாட்டு சட்டம், 1999.

அவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று பம்பாய் ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

கொலீஜியத்தின் இந்த பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்டால், சுப்ரீம்கோர்ட்டு அதன் முழு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் எண்ணிக்கையுடன் செயல்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com