இலவசங்கள் அறிவிப்புக்கு எதிரான மனு தள்ளுபடி-சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இலவசங்கள் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் ெசய்யப்பட்ட ஒரு மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
மத்திய, மாநில அரசுகள் இலவசங்களோ, ரொக்கப்பரிசோ, நலத்திட்டங்களோ அறிவிப்பதற்கு முன்பு, அதனால் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்து நிபுணர்களை கொண்டு விரிவான ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், மாநில திட்ட கமிஷன் ஆகியவற்றிடம் ஒப்புதல் பெற உத்தரவிட வேண்டும்.
மேலும், இலவச திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, அந்த மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்தை தாண்டக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரிக்க விரும்பவில்லை என்று கூறி, அதை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Related Tags :
Next Story






