

புதுடெல்லி,
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான பவன் கேரா, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக அவர் மீது அசாமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவர் சத்தீஸ்கரில் நடக்கும் காங்., மாநாட்டிற்காக செல்வதற்காக டெல்லி விமான நிலையம் வந்த அவர் இண்டிகோ விமானத்தில் அமர்ந்திருந்தார்.
அவரை கைது செய்வதற்காக அசாம் போலீசார் விமான நிலையம் வந்தனர். விமான நிலைய அதிகாரிகளிடம் எப்ஐஆர்., தகவலை காண்பித்தனர். தொடர்ந்து போலீசார் கேட்டு கொண்டதால், பவன் கேரா விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த நிலையில், பவன் கேராவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது