காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம்கோர்ட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான பவன் கேரா, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக அவர் மீது அசாமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தசூழலில் அவர் சத்தீஸ்கரில் நடக்கும் காங்., மாநாட்டிற்காக செல்வதற்காக டெல்லி விமான நிலையம் வந்த அவர் இண்டிகோ விமானத்தில் அமர்ந்திருந்தார். அவரை கைது செய்வதற்காக அசாம் போலீசார் விமான நிலையம் வந்தனர்.

விமான நிலைய அதிகாரிகளிடம் எப்ஐஆர்., தகவலை காண்பித்தனர். தொடர்ந்து போலீசார் கேட்டு கொண்டதால், பவன் கேரா விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

இதனையடுத்து, பவன் கேராவுடன் சத்தீஸ்கர் செல்லவிருந்த காங்கிரசார், விமானத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து துணை ராணுவப்படையினர் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். விமானம் கிளம்பி செல்வதில் தாமதம் ஏற்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் முன் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் செய்தது. இந்த மனுவினை இன்று பிற்பகல் 3 மணிக்கு சுப்ரீம்கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துத்கெண்டது. அதில் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com