நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி- உச்ச நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி- உச்ச நீதிமன்றம்
Published on

புதுடெல்லி,

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகளின் செயல்பாட்டை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் பதிவிட்டு இருந்தார். இதை கவனத்தில் எடுத்த உச்ச நீதிமன்றம், தானாக முன் வந்து பிரஷாந்த் பூஷனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து விசாரித்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில்,, இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. பிரசாந்த் பூஷணுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த வாதம் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com