சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு அறிமுகம்

கோப்புப்படம்
வரலாற்றில் முதல் முறையாக சுப்ரீம்கோர்ட்டில், இடஒதுக்கீடு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் முதல் முறையாக ஊழிர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு நடைமுறையை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமல்படுத்தி உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்களுக்கு இதுவரை இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. இந்நிலையில், முதல் முறையாக அவர்களுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஊழியர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை மூலம் இம்முடிவு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, பட்டியல் இனம் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களுக்கு நேரடி நியமனத்திலும், பதவி உயர்விலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர்கள், மூத்த தனி உதவியாளர்கள், உதவி நூலகர்கள், இளநிலை கோர்ட்டு உதவியாளர்கள், சேம்பர் உதவியாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு பலன்கள் கிடைக்கும்.
இதுதொடர்பான மாதிரி இடஒதுக்கீடு பட்டியல் மற்றும் பதிவேடு, சுப்ரீம் கோர்ட்டின் இ-மெயில் நெட்வொர்க்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23-ந் தேதி, இடஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ளது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தாலோ, தவறுகள் தெரிய வந்தாலோ, அதுகுறித்து பதிவாளரிடம் (ஆள்தேர்வு) தெரிவிக்கலாம். இத்தகவல்கள், சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளன.






