பெகாசஸ் விவகாரம்: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
பெகாசஸ் விவகாரம்: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் செல்போன்கள் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள், மத்திய அரசை விமர்சனம் செய்து, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதற்கிடையில் பெகாசஸ் உளவு விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த மனு இன்று தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com