4 இந்திய தூதரகங்களில் வெளிமுகமை மூலம் சேவைகளை மேற்கொள்வதற்கான டெண்டர் ரத்து - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

வெளிமுகமை மூலம் தூதரக சேவைகளை மேற்கொள்வதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
4 இந்திய தூதரகங்களில் வெளிமுகமை மூலம் சேவைகளை மேற்கொள்வதற்கான டெண்டர் ரத்து - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

புதுடெல்லி,

அபுதாபி, குவைத், சிங்கப்பூர் மற்றும் கேண்டர்போரா ஆகிய 4 இந்திய தூதரங்களின் பாஸ்போர்ட் விசா மற்றும் தூதரக சேவைகளை வெளிமுகமை(Outsourcing) மூலம் ஒப்பந்தம் செய்வதற்காக வெளியிடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட்டு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

இதில் மத்திய அரசின் வாதத்தை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ததோடு, மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், புதிய டெண்டர் செயல்முறை முழுமை அடையும் வரை வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் சேவைகளில் எவ்வித தடையும் இன்றி தொடர இடைக்கால ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகத்திற்கும், இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடட் நிறுவனத்திற்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதிய டெண்டர் செயல்முறையை விரைவாகவும், முன்னுரிமை அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, டெண்டர் நிபந்தனைகளை வெளிப்படையாக தெரிவிக்காமல் டெண்டர் கோரப்பட்ட பிறகு அதன் நிபந்தனைகளை மாற்ற முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com