ஸ்கூட்டர் மீது சொகுசு கார் மோதி விபத்து - சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் பலி

தலைமறைவாக உள்ள டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்கூட்டர் மீது சொகுசு கார் மோதி விபத்து - சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் பலி
Published on

லக்னோ,

ஸ்கூட்டர் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் உயிரிழந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா மேற்கு பகுதியை சேர்ந்தவர் நீரஜ் (வயது 40). இவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார்.

வழக்கறிஞர் பலி

இந்நிலையில், நீரஜ் அவரது மனைவியிடன் நேற்று மதியம் ஸ்கூட்டரில் கிரேட்டர் நொய்டாவின் பிஸ்காரா பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையில் எதிர்திசையில் வேகமாக வந்த சொகுசு கார் நீர்ஜ் மற்றும் அவரது மனைவி பயணித்த ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட நீரஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயமடைந்தார்.

இதையடுத்து, படுகாயமடைந்த பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள டிரைவரை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com