கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி


கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 25 July 2024 1:24 PM IST (Updated: 25 July 2024 3:33 PM IST)
t-max-icont-min-icon

கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள வரிகளை திரும்ப பெறுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டிடம் மாநில அரசுகள் விளக்கம் கேட்டன. இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, கடந்த 2011ஆம் ஆண்டு நேரடியாக 9 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்றி பரிந்துரைத்தது.

இதன்படி, 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. அதில் தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட் உள்ளிட்ட 8 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கினர். நீதிபதி பிவி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அளித்த தீர்ப்பில் கூறியதாவது: அரசியலமைப்பின் பட்டியல் 2, பிரிவு 50-இன் கீழ் கனிம வளங்களுக்கு வரி விதிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது.சுரங்கங்கள், தாதுக்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளில் மாநிலங்களுக்கான உரிமைகளை கட்டுப்படுத்தும் பிரிவுகள் எதுவும் இல்லை" என்று கூறப்பட்டது. நீதிபதி நாகரத்னா அளித்த தீர்ப்பில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்களைக் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை"எனக் கூறினார்.

1 More update

Next Story