திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றினீர்களா? இல்லையா? - சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றினீர்களா? இல்லையா? - சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
Published on: 

டெல்லி,

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றினீர்களா? இல்லையா? என்று மதுரை கலெக்டருக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

தீபத்தூண் வழக்கு

முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள மலையில் தீபத்தூணில் நவம்பர் 24ம் தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று ஒருமுறை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்போது, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றினீர்களா? இல்லையா? என்று மதுரை கலெக்டர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார். தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, ஐஜி பெயர்கள் என்ன? என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார். அனைத்து தரப்பு வாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

X