வெளிநாடு செல்ல அனுமதி கோரிய இந்திராணி முகர்ஜி மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு

மகள் ஷீனா போரா கொலை வழக்கில் 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
வெளிநாடு செல்ல அனுமதி கோரிய இந்திராணி முகர்ஜி மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு
Published on

பெங்களூரு,

மகள் ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தனியார் தொலைகாட்சி நிர்வாகி இந்திராணி முகர்ஜி, சில அவசர காரணங்களுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது அவரது மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது:-

இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, எந்தவொரு நிவாரணமாக இருந்தாலும் இந்திராணி முகர்ஜி விசாரணை நீதிமன்றத்தையே அணுக வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இருப்பினும் அவசரமாக செல்லவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதால், விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், அந்த நீதி மன்றம் அதனை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மகள் ஷீனா போரா கொலை வழக்கில் 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜி, 6 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு சுப் ரீம் கோர்ட்டால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு இவர் வெளிநாடு செல்ல சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்திருந்தாலும், சி.பி.ஐ. மேல்முறையீட்டின் பேரில் மும்பை ஐகோர்ட்டு அதற்கு தடை விதித்தது. வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவர் வெளிநாடு சென்றால் மீண்டும் திரும்புவதற்கு உத்தரவாதம் இல்லை என கூறி கோர்ட்டு அவ ரது கோரிக்கையை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com