நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி மனு: தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. #Sridevi #SupremeCourt
நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி மனு: தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
Published on

புதுடெல்லி,

பிரபல நடிகை ஸ்ரீதேவி, கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வா இல்லத் திருமணத்துக்காக கடந்த 22-ந்தேதி துபாய் சென்றிருந்தார். திருமணம் முடிந்து 24-ந்தேதி அங்குள்ள ஜூமெய்ரா எமிரேட்ஸ் டவர்ஸ் என்ற நட்சத்திர ஓட்டலில் கணவருடன் தங்கினார். அன்றிரவு அவர் குளியல் அறைக்கு சென்றபோது நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஸ்ரீதேவியின் மரணம் இந்திய திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஸ்ரீதேவி, துபாயில் மரணம் அடைந்தது குறித்து விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com