தமிழ் உள்பட 9 மாநில மொழிகளில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் - நாடாளுமன்றத்தில் சட்ட மந்திரி தகவல்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள், தமிழ் உள்பட 9 மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் சட்ட மந்திரி தெரிவித்தார்.
தமிழ் உள்பட 9 மாநில மொழிகளில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் - நாடாளுமன்றத்தில் சட்ட மந்திரி தகவல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

தற்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள், 9 மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அசாமி, வங்காளம், இந்தி, கன்னடம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது ஆகியவைதான் அந்த 9 மொழிகள் ஆகும்.

தொழிலாளர் விவகாரங்கள், வாடகை சட்டம், நிலம் கையகப்படுத்துதல் விவகாரங்கள், சேவை விவகாரங்கள், இழப்பீடு விவகாரங்கள், குற்றவியல் விவகாரங்கள், குடும்ப சட்ட விவகாரங்கள், சாதாரண சிவில் விவகாரங்கள், தனிநபர் சட்ட விவகாரங்கள், மதம் மற்றும் அறநிலையத்துறை விவகாரங்கள்,

அடகு, பொது இடங்களில் இருந்து வெளியேற்றும் சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு விவகாரங்கள் ஆகியவை தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளின் தீர்ப்புகள், மொழி பெயர்த்து வெளியிடப்படுகின்றன. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com