புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
Published on

புதுடெல்லி,

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான உதவிகளை செய்யவில்லை என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த உச்ச நீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வந்தாலும், அவை போதுமானதாக இல்லை என அதிருப்தி தெரிவித்தது.

இன்னமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வருவதாக கூறிய நீதிமன்றம், தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, உறைவிடம், பயண ஏற்பாடு என அனைத்தையும் இலவசமாக செய்து கொடுக்க, மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com