ஆண்கள் நலனுக்காக தேசிய ஆணையம் அமைக்கக்கோரி பொதுநல மனு - சுப்ரீம் கோர்ட்டில் 3-ந் தேதி விசாரணை

ஆண்கள் நலனுக்காக தேசிய ஆணையம் அமைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடராக சுப்ரீம் கோர்ட்டில் 3-ந் தேதி விசாரணை நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் மகேஷ்குமார் திவாரி என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படி, கடந்த 2021-ம் ஆண்டு, 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 81 ஆயிரம் பேர் திருமணமான ஆண்கள், 28 ஆயிரத்து 680 பேர் திருமணமான பெண்கள் ஆவர்.

குடும்ப பிரச்சினைகளால் திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். குடும்ப பிரச்சினை தொடர்பான ஆண்களின் புகார்களை போலீஸ் நிலையத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆண்களின் நலன்களை பாதுகாக்க 'தேசிய ஆண்கள் ஆணையம்' அமைக்க சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இம்மனு நீதிபதிகள் சூர்யகாந்த், திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 3-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com