

புதுடெல்லி,
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், "நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சி அமைத்தது.
எனினும், தி.மு.க. கூட்டணியில் இருந்த சில கட்சிகள் மற்றும் அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினரின் ஆதரவோடு, கடந்த 13-ந் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. இந்த வாக்கெடுப்பில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற அரசியல் கட்சிகளிடையே ரூ.1,000 கோடி அளவுக்கு குதிரை பேரம் நடந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. எனவே, இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை தமிழகத்தில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ரிட் மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி வி.மோகனா அடங்கிய அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.