பிப்., 14ஆம் தேதிமுதல் சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் நேரடி விசாரணை தொடக்கம்..!

கொரோனா பரவல் சரிவு காரணமாக, பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் நேரடி விசாரணை தொடங்க உள்ளது தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கடந்த 2020-ஆம் ஆண்டு மாச் மாதம் கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோது சுப்ரீம்கோர்ட்டு நேரடி விசாரணை முறையை கைவிட்டு வழக்குகளை காணொலி வழியாக விசாரிக்கத் தொடங்கியது.

கடந்த ஆண்டு நவம்பா 9-ஆம் தேதி முதல் செவ்வாய், புதன், வியாழன் என வாரத்தில் 3 நாள்கள் மீண்டும் நேரடி விசாரணை நடைபெற்று வந்தது. ஒமைக்ரான் பரவலைத் தொடாந்து மீண்டும் வழக்குகள் முழுமையாக காணொலி வழியில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தசூழலில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் வாரத்திற்கு இரண்டு முறை சுப்ரீம்கோர்ட்டில் நேரடி விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுப்ரீம்கோர்ட்டின் சுப்ரீம்கோர்ட்டின் பொதுச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிபதிகள் குழுவுடன் கலந்தாலோசித்து இந்திய தலைமை நீதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேரடி விசாரணைகள் வாரத்திற்கு இரண்டு முறை - புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நடைபெறும். கடந்த ஆண்டு முடிவு செய்தபடி மற்ற நாட்களில் கலப்பு முறையில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com